கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகமது ஆலம், சபீனா சர்தார், பிலால் ஹுசேன் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவர்களிடம், தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.