விளாத்திகுளம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5200
குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய கனிமொழி எம். பி.!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடர்ந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார். அதன்படி இன்று விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார், சிப்பிக்குளம், ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம், வேப்பிலோடை உள்ளிட்ட கிராமங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும்
திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம். பி. , அரிசிப்பை, சமையல் பொருட்கள், துணிகள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 5200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். பின்னர் வெள்ள பாதிப்பில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களிடம், அங்குள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களாக பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துச்சென்றார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.