தாய்லாந்து: கழுத்து மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்ட வலியை சரிசெய்ய மசாஜ் செய்து கொண்ட 20 வயதே ஆன பாடகி சாயதா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மசாஜ் செய்யும் போது கழுத்தை முறுக்கியதில் வீக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாயதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடைசியாக அவர் பேசி வெளியிட்ட வீடியோவில், "மசாஜ் செய்வதை மிகவும் விரும்புபவர்களுக்கு இதை ஒரு பாடமாக விட்டுவிட விரும்புகிறேன். நான் மீண்டு வருவேன்" என்று கூறியுள்ளார்.