கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழா இன்று (செப்.,5) கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.