தூத்துக்குடி - Thoothukudi

கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை காரணமாக உப்புத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.   இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படும் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டமாகும். இங்கு சுமார் 40, 000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறும் ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் டன் சராசரியாக உற்பத்தியாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.    கடந்த ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தாமதமாக இரண்டு மாதங்கள் கழித்து மார்ச் மாதம் துவங்கிய நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதன் காரணமாக உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெற்றது.    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கியது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

வீடியோஸ்


தூத்துக்குடி
அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம்!
May 21, 2024, 11:05 IST/கோவில்பட்டி
கோவில்பட்டி

அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம்!

May 21, 2024, 11:05 IST
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அஞ்சலக அடையாள அட்டை' எனும் சேவை மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரியுடன் புகைப்படமும் இடம் பெற்றிருக்கும். இதனை முகவரிச் சான்றாக வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும் மற்றும் பல்வேறு தேவைகளுக்கும் சான்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சலக அடையாள அட்டையினை பொதுமக்கள் அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை ரூ. 20/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இதனை, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று அந்த பகுதி தபால்காரர் மூலம் சரிபார்க்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ. 250/- பதிவுத்தபால் மூலம் பெற்றுக்கொள்ள ரூ. 22/- அதிகமாக செலுத்த வேண்டும். இந்த அட்டை மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும். ஆதார் அட்டை முகவரி மாற்றம் செய்ய இதனை ஒரு சான்றாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.