தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் கொம்பன் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்திபாண்டி மகள் நர்மதா தேவி (வயது 23), இவர் தென்காசியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்தாராம். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசுவார்களாம். இதனை நர்மதா தேவி குடும்பத்தினர் கண்டித்து, காதலுக்கு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனையடைந்த நர்மதா தேவி கடந்த மாதம் 28ஆம் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தாரார். அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று(செப்.8) இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இயேசுபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.