அண்ணாமலை தோல்வியால் மொட்டையடித்து கொண்ட பாஜ நிர்வாகி!

83பார்த்தது
கோவையில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியால்
பரமன்குறிச்சி பஜாரில் மொட்டையடித்து கொண்ட பாஜ நிர்வாகி


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் பரமன் குறிச்சி முந்திரி தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதே ஊரைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நண்பர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார். அவ்வாறு அப்படி வெற்றி பெறவில்லை என்றால் , பரமன்குறிச்சி பஜாரில் மொட்டை போட்டு ரவுண்டானாவை சுற்றி வருவேன் என சவால் விட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததால் பாஜக பிரமுகர் ஜெய்சங்கர் புதன்கிழமை பரமன்குறிச்சி பஜாரில் மொட்டையடித்து கொண்டார். பின்னர் ரவுண்டானாவை சுற்றி வந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி