அமைச்சர் மகன்கள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்!

62பார்த்தது
கடந்த 2001 - 2006ம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4. 90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மாவட்ட முதன்மை நீதிபதி ஐய்யப்பன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது

இன்று வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயகாந்தி மற்றும் தம்பிகள் ஒரு மகன் உள்ளிட்ட ஐந்து பேர் ஆஜராகாத நிலையில் இரண்டு மகன்கள் ஆன ந்த மகேஸ்வரன் ஆனந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகினர்


இந்நிலையில் இந்த வழக்கின் 16வது அரசு தரப்பு சாட்சியான பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற பொறியாளர் சம்பத்திடம் இன்று அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு சார்பில் மறுவிசாரணை பிற்பகல் 12: 00 மணிக்கு மேல் நடைபெறுகிறது

தொடர்புடைய செய்தி