பணியின்போது மரணமடைந்த எஸ்ஐ குடும்பத்திற்கு நிதியுதவி!

84பார்த்தது
பணியின்போது மரணமடைந்த எஸ்ஐ குடும்பத்திற்கு நிதியுதவி!
சங்கரன்கோவிலில் பணியின்போது மரணமடைந்த ஆறுமுகநேரி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் குடும்பத்தினரிடம் அவரது பேட்ஜைச் சேர்ந்த போலீசார் ரூ. 6. 82 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினர்.

திருச்செந்தூர் குமாரபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் 1993ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். கடைசியாக ஆறுமுகநேரி போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 13ம் சங்கரன்கோவிலில் சிறப்பு பணியில் இருந்த போது பாஸ்கரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து 1993ல் பணியில் சேர்ந்து போலீசார் மாநில அளவில் காக்கும் கரங்கள் அமைப்பை ஏற்படுத்தி இணைந்த செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 1993 பேட்ஜைச் சேர்ந்த 7 பேர் பணியில் மரணமடைந்தனர்.

இவர்களுக்கு அவரது காக்கும் கரங்கள் அமைப்பு சேர்ந்த போலீசார் நலநிதியை திரட்டினார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மரணமடைந்த திருச்செந்தூர் பாஸ்கரன் வீட்டிற்கு சென்ற அவரது பேட்ஜ் போலீசார் அவரது உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் பாஸ்கரன் மனைவி பாலசக்தியம்மாளிடம் குடும்ப நலநிதியாக ரூ. 6 லட்சத்து 82 ஆயிரத்து 600யை வழங்கினர். அப்போது அவரது மகன் விஜய் ஆனந்த், சாய் அமிர்தா ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சியில் பாஸ்கரன் பேட்ஜை சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி