வெயிலில் குளிர்ச்சியான நீரை அருந்துவதையே பலரும் விரும்புகின்றனர். குளிர்ந்த நீர் உடலில் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. எரிச்சல், தொண்டை புண் மற்றும் மூக்கடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்று நுரையீரல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெயிலில் இருந்துவிட்டு, திடீரென வீட்டுக்கு வந்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் குடித்தால், இரண்டு வெப்பநிலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். இதனால், இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.