புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிக்கப்படாமல் இருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி பாஜக அரசை விமர்சித்துள்ளது. பிரதமர் பதவியேற்று கிட்டத்தட்ட 24 மணிநேரம் ஆகியும் இன்னும் அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அமைச்சரவை பதவியேற்ற சிறிது நேரத்தில் இலாக்காக்கள் அறிவிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.