இறந்தது போல நடித்தோம் தாக்குதலில் பிழைத்தவர் வேதனை பேட்டி

71பார்த்தது
இறந்தது போல நடித்தோம் தாக்குதலில் பிழைத்தவர் வேதனை பேட்டி
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் நேற்று(ஜூன் 10) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உள்ளான பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த நபர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, “பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த பிறகும் தீவிரவாதிகள் தாக்குதலை நிறுத்தவில்லை. தொடர்ந்து சில நிமிடங்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது நாங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக இறந்தது போல நடித்தோம். அதன் பின்னர் தான் மீட்பு படையினர் எங்களை மீட்டனர்” என வேதனையுடன் கூறினார்.

தொடர்புடைய செய்தி