தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர். மு. கலைஞர் அவர்களால் 23. 07. 2009 அன்று உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் கலைஞரின் காப்பீட்டு திட்டம் துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டம் மேலும் 10. 01. 2022 அன்று 1. 47 இலட்சம் குடும்பங்களுக்கு பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உயர் மு. க. ஸ்டாலின் அவர்களால் விரிவுபடுத்தப்பட்டது.
காப்பீட்டு திட்ட பயனாளிகள் குடும்பத்திற்கு ரூ. 5 இலட்சம் வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை பெறலாம்.
நமது தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி 30. 09. 2024, 01. 10. 2024, 03. 10. 2024, 04. 10. 2024 ஆகிய தினங்களில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 05. 10. 2024, 07. 10. 2024, 08. 10. 2024, 09. 10. 2024 ஆகிய தினங்களில் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 10. 10. 2024, 14. 10. 2024, 15. 10. 2024 ஆகிய தினங்களில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.