தூத்துக்குடி அருகே திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடி தேவர் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி மனைவி மலையரசி (22), இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் மலையரசிக்கு விருப்பம் இல்லையாம். மேலும் அவர் கணவரை பிரிந்து தனது பாட்டி இசக்கித்தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், திருமணம் ஆன ஒரே ஆண்டில் மலையரசி தற்கொலை செய்து கொண்டதால் சம்பவம் குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.