தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி வழிப்பறி

2965பார்த்தது
தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி வழிப்பறி
ஏரல் அருகே அரிவாளால் தாக்கி தனியார் நிறுவன ஊழியர்களிடம் பணம், செல்போனை பறித்த 3பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பட்ராலி மகன் காஜா முகைதீன் (29), அபுல் மகன் அன்வர் (21). இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10. 30 மணியளவில் வேலை முடிந்து பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொணடிருந்தனர். அப்போது ஒரே பைக்கில் வந்த 3பேர் அரிவாளைக் காட்டி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தை கொடுக்க மறுத்த அன்வரை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ. 3ஆயிரம் பணம் மற்றும் முகதீனிடம் இருந்த ரூ. 8ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த அன்வர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.