கோவை புலியகுளம் முந்தி விநாயகருக்கு 2 டன் மலர்களால் சந்தன காப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப்டம்பர் 07) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இதனையொட்டி, ஆசியாவிலேயே ஒரே கல்லில் செய்யப்பட்ட 190 டன் எடை கொண்ட மிக பெரிய விநாயகர் சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.