தூத்துக்குடி: கணவர் கண் முன்னே மனைவி பலி; பரபரப்பு
பசுவந்தனை அருகே பைக் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் காயம் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் பரமசிவன் மனைவி முத்துமாரி (40). இவர்கள் இருவரும் கோவில்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கோவில்பட்டி பிரதான சாலையில் செல்லும்போது பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் முத்துமாரி படுகாயம் அடைந்தார். அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். லேசான காயம் அடைந்த பரமசிவம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.