தூத்துக்குடி அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள கீழ செக்காரகுடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் ராமசாமி (55). இவர் பைக்கில் வாகைகுளத்தில் இருந்து கீழசெக்காரக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். பொட்டலூரணி விலக்கு அருகே சென்றபோது பைக் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த ராமசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.