ஏரல் ஆடி அமாவாசை திருவிழா: 20ஆம் தேதி கொடியேற்றம்

82பார்த்தது
ஏரல் ஆடி அமாவாசை திருவிழா: 20ஆம் தேதி கொடியேற்றம்
தூத்துக்குடி: ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாச்சல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா, வரும் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவில், 9ஆம் திருநாள் வரை தினசரி காலை சேர்ம விநாயகர் உலாவும், இரவில் பல்வேறு கோலங்களில் சுவாமி உலாவும் நடைபெறும். 12ஆம் திருநாள் 31ஆம் தேதி காலை தீர்த்தவாரி, பொருநை நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடலும், மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி