தூத்துக்குடி: மைசூர் எக்ஸ்பிரஸ் தாமதம்; பயணிகள் அவதி

77பார்த்தது
தூத்துக்குடி: மைசூர் எக்ஸ்பிரஸ் தாமதம்; பயணிகள் அவதி
தூத்துக்குடியில் தண்டவாள பராமரிப்பு பணி நிறைவு பெறாததால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள 1ஆம் ரயில்வே கேட், பராமரிப்பு பணி காரணமாக நேற்று (அக்.,5) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவு பெறவில்லை.

இதனால் மாலை 5. 15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பவில்லை. இதையடுத்து தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி