டாப்செட்கோ மூலம் கடன்கள் வழங்கப்படும்: ஆட்சியர் தகவல்

82பார்த்தது
டாப்செட்கோ மூலம் கடன்கள் வழங்கப்படும்: ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் டாப்செட்கோ நிறுவனத்தின் மூலம் கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தனிநபர் கடன் இத்திட்டத்தில் தனிநபருக்கு அதிக பட்சமாக ரூ. 15. 00 இலட்சம் வரையில், ஆண்டு வட்டி விகிதம் 6% முதல் 8% வரையில் கடன் வழங்கப்படும். கடன் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 8 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தில் சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள், விவசாயம் சார்ந்த உப தொழில்கள், போக்குவரத்து சம்பந்தப்பட்ட தொழில்கள், கைவினைஞர் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள், இளம் தொழிற்கல்வி பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க கடனுதவிகள் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி