அக்டோபர் 6-ஆம் தேதி உலகப் பெருமூளை வாத நாளாகக் [World Cerebral Palsy Day] கடைபிடிக்கப்படுகிறது. பெருமூளை வாதம் எனப்படும் cerebral palsy ஒரு நபரின் பேச்சு, கை கால் அசைவுகள், மற்றும் நடை ஆகியவற்றை பாதிக்கும் ஒரு குறைபாடாகும். அதாவது உடல் தசைகளின் ஒட்டுமொத்த இயக்கத்திலும் ஏற்படும் பாதிப்பாக இருக்கும். மூளை சரியான வளர்ச்சி அல்லது முதிர்ச்சி அடையாததால் குழந்தை பிறக்கும் முன்பே ஏற்படக்கூடிய பிரச்னை இது.