சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தெற்கு மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி வட்டச் செயலாளரும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான ஏ.ஸ்டாலின் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால் நடவடிக்கை என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.