ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது வெல்லம். சிலர் நன்கு உணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு வெல்லம் எடுத்து கொள்வார்கள், இதற்கு காரணம் வெல்லம் செரிமானத்திற்கு நல்லது. தினசரி வெல்ல நுகர்வு கல்லீரலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்த, மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க விரும்புவோர் அடிக்கடி சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வரலாம்.