விமான நிலையத்தில் விமானம் கடத்தல் ஒத்திகை: ஆட்சியர் ஆய்வு

2209பார்த்தது
தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன்படி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இந்த ஒத்திகை இன்று நடைபெற்றது. இதில் பயணிகள் விமானக் கடத்தலை தடுக்கவும், அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான தற்செயல் திட்டத்தின் செயல்திறனைச் சோதிக்கும் வகையிலும், அசம்பாவிதங்களை எதிா்கொள்ளவும் ஒத்திகை நடைபெற்றது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி தலைமையில் விமான நிலைய குழுக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் தயாா்நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் விமான நிலைய இயக்குநா் ஆா். ராஜேஷ், மற்றும் மத்திய உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு படை, இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி