ஆள் இல்லாத கிராமம்: ஆசை நிறைவேறாமல் முதியவர் மறைவு!

2207பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மீனாட்சிபுரம் கிராமம் தனி வருவாய் கிராமமாக செயல்பட்டு வந்த மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்துள்ளன மேலும் ஒரு சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வசித்து வந்துள்ளனர். விவசாயத்தில் செல்வ செழிப்புடன் இருந்த கிராமம்.

இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு அருகே பொதுப்பணித்துறை சார்பில் ஒரு குளம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த கிராமத்திற்கு வந்த கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் உடைபட்டதால் அந்த கிராமத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிராமத்தில் கந்தசாமி என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு கந்தசாமியின் மனைவி இறந்துவிட கந்தசாமி மட்டும் தனது கிராமத்தில் மீண்டும் தனது கிராமம் பழைய நிலைமை ஆகும் என்ற வைராக்கியத்துடன் தான் இந்த கிராமத்தை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என உறுதியாக இருந்து அங்கேயே வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரும் வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த கிராமம் ஆள் இல்லாத கிராமமாக மாறி உள்ளது.

தொடர்புடைய செய்தி