விமர்சிப்பவர்களுக்கு நன்றி, விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தவறுகளை திருத்திக் கொள்வேன் என துணை முதலமைச்சராக பொறுபேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் பேசிய அவர், எல்லா விமர்சனங்களையும் வரவேற்கிறோம். எனது பணிகள் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பேன். இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன் என்றார்.