நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது: கனிமொழி

77பார்த்தது
தூத்துக்குடி அருகே கோவில்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் பேசியதாவது, "நமக்கு என்று ஒரு ஜனநாயக கடமை உள்ளது. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்ற, போராடி ஏராளமானோர் உயிரிழந்திருப்பது நமக்கு தெரியும். ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் விடுதலை வாங்கி இருக்கிறோம். இன்னைக்கும் மறுபடியும் ஒரு அடக்குமுறை ஆட்சி ஒன்றியத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

பாஜக ஆட்சியில் போராடக்கூடிய உரிமை மக்களுக்கு கிடையாது. அரசாங்கத்தை குற்றம் சொல்ல கூடிய உரிமை பத்திரிக்கை ஊடகத்திற்கு கிடையாது. எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியில் இருக்க கூடிய குறைகளை எடுத்துச் சொல்லக் கூடாது. யார் இதைச் சொன்னாலும் சிறைக்குதான் அனுப்பப்படுகிறார்கள். இரண்டு முதலமைச்சர்கள் இன்னைக்கு சிறையில் இருக்கிறார்கள்.

வரக்கூடிய தேர்தல் மோடிக்கு அதிமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியும். ஆனா, போய் ஓட்டு போடணும். வெயிலுக்கு அப்புறம் போகலாம், ஒரு நாள்தானே லீவு என்று வீட்டில் உட்கார்ந்து விடக்கூடாது. நீங்க போறது மட்டுமல்ல உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மற்றவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். பக்கத்து வீடு, அடுத்த வீட்டில் உட்கார்ந்தவர்களையும் ஓட்டு போட வைக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு என்று ஒரு ஜனநாயக கடமை உள்ளது. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

தொடர்புடைய செய்தி