ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை!

25764பார்த்தது
ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை!
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மதுபான கடைகள் இன்று முதல் மூடப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுபிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை நேற்று ஒரே நாளில் வாங்கி குவித்துள்ளனர். இந்நிலையில் அவ்வாறு வாங்கி வைத்துள்ள மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி