ஆஸ்துமா பரம்பரையாக வரும் நோய் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பெற்றோர், மூதாதையார் அல்லது உறவினர்களில் யாருக்கேனும் ஆஸ்துமா தாக்கியிருந்தால், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பரம்பரையின் தாக்கத்தால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது. ‘இன்ட்ரன்சிக் ஆஸ்துமா’ எனப்படும் இந்த வகை 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் உட்புறகாரணிகள் பரம்பரை மற்றும் மரபணு ஆகும்.