சொர்ணமலை கிரிவலப்பாதையில் மரம் நடும் விழா

51பார்த்தது
சொர்ணமலை கிரிவலப்பாதையில் மரம் நடும் விழா
கோவில்பட்டி சொர்ணமலை கிரிவலப்பாதையில் ரோட்டரி சங்கத்தினர் 200 மரக்கன்றுகளை நட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ண மலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் கிரிவலப் பாதையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் வனத்துறையுடன் இணைந்து 200 மரக்கன்றுகளை நட்டினர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதர கண்ணன் தலைமை வகித்தார்.

வனத்துறை வனவர் பேச்சிமுத்து, ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் கிரிவலப் பாதையில் கோவில்பட்டி வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.

இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவிமாணிக்கம், கிருஷ்ணசாமி, மாரியப்பன், ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி