ஜெபக்கூடம், கோயிலில் திருட்டு.. தந்தை, மகன் கைது

62பார்த்தது
ஜெபக்கூடம், கோயிலில் திருட்டு.. தந்தை, மகன் கைது
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே கல்லூரியில் உள்ள ஜெபக் கூடத்தில் ஒலி பெருக்கிகள் அண்மையில் திருட்டு போனது. இதேபோல, வானரமுட்டி பார்வதி நகரில் உள்ள வீரைய்யா அங்காள ஈஸ்வரி சீலைக்காரி அம்மன் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போனது. இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக, நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வந்தனர்.

திருட்டு நடந்த பகுதி மற்றும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையின் விசாரணை மேற்கொண்டதில், தென்காசி மாவட்டம் கீழநீலிதநல்லூர், ஆர். சி. ஆலய வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் (47) மற்றும் அவரது மகன் சந்தன மாரியப்பன் (24) ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி