அக்., 4-ல் தவெக முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை

70பார்த்தது
அக்., 4-ல் தவெக முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை
அக்., 4ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் பணி அதே நாளில் நடைபெறும். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் வருகிற அக்.,27ஆம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைபாடு குறித்து கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளார். இதற்காக மாநில அளவில் நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி