"மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

71பார்த்தது
"மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகளிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் திருமதி. கமலாதேவி மற்றும் போலீசார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான சிதம்பரம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடமும் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமதி. காயத்ரி மற்றும் போலீசார் உத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளிடமும், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தகுமாரி தலைமையில் சார்பு ஆய்வாளர் திருமதி. அனுசியா மற்றும் போலீசார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடமும், கயத்தாறு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. தமிழ்செல்வன் மற்றும் போலீசார் கயத்தாறு கட்டபொம்மன் அரசு மேல்நிலை ப்பள்ளியில் மாணவ மாணவிகளிடமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு உள்ளிட்ட விழிப்புணர்வுகள் குறித்து ‘மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி