திமுகவின் மாயை அகற்றப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் பேட்டி

83பார்த்தது
திமுகவின் மாயை அகற்றப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழிற்பேட்டை மற்றும் சிவந்திபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடைகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தால் தி.மு.க. , ஊழலுக்கு எதிரான கட்சி என்ற மாயை அகற்றப்பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதே ஆட்சியில் தான் அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றுள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நாட்களை சாதனையாக கூறுகின்றனர். செந்தில் பாலாஜியை முதல்வராக கூட ஆக்கலாம், அதற்கு விதி இருக்கிறது. ஆனால் மரபை பார்க்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் விதியை மதிக்கின்றாரா அல்லது மரபை கடைபிடிக்கின்றாரா என்பது அமைச்சரவை மாற்றத்தின் மூலம் தெரியவரும். செந்தில் பாலாஜி சிறை செல்வார் என்ற ஸ்டாலின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது. எதிர் பக்கம் இருந்தால் கோட்சே; தன் பக்கம் வந்து விட்டால் காந்தி என்று சொல்வதைப்போல செந்தில் பாலாஜி விவகாரத்தை தி.மு.க., கையாளுகிறது என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு ராஜூ தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி