தம்பிக்கு மிரட்டல் அண்ணன் மீது வழக்கு பதிவு!

79பார்த்தது
தம்பிக்கு மிரட்டல் அண்ணன் மீது வழக்கு பதிவு!
கடம்பூா் அருகே தம்பியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அண்ணனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடம்பூா் தங்கம்மாள்புரம் காலனியைச் சோ்ந்தவா் சிவன் மகன் அய்யனாா் (40). இவரது சகோதரா் ராஜீவ் காந்தி (38). இருவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து அய்யனாா் கம்பியால் ராஜீவ் காந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயம் அடைந்த ராஜீவ் காந்தி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில் கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி