கேஸ் டேங்கர் லாரி ஓட்டுநர் கைது

54பார்த்தது
கோவை உப்பிலிபாளையத்தில் கேஸ் டேங்கர் லாரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (ஜன., 03) அதிகாலை அவிநாசி சாலையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. அதிவேகமாக லாரியை ஓட்டி வந்தது, ஆபத்தான முறையில் இயக்கி வந்து விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி