நீலகிரி: உதகையில் கடுங்குளிர் காரணமாக வீட்டிற்குள் தீ மூட்டி உறங்கியவர் மூச்சுத்திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தலார் பஜார் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் கடுங்குளிர் காரணமாக வீட்டிற்குள் தீமூட்டி குடும்பத்தினருடன் உறங்கியுள்ளார். ஜெயபிரகாஷ் மனைவி புவனா, மகள் தீயாஸ்ரீ, மாமியார் ஈஸ்வரி, உறவினர் சாந்தா ஆகியோர் மயக்கமடைந்த நிலையில், உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.