திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு, வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயார் சன்னதியில் நேற்று (ஜன., 03) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.