உலகளவில் 1 - 2 வயதுக்குள், 5 வயதில் மற்றும் பருவ வயதில் என்று மூன்று பிரிவுகளில் நீரிழிவு நோய் அதிகமாகக் கண்டறியப்படுகிறது. டைப்-1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்கு ஏற்பட பிறவி ரூபெல்லா வைரஸ் தொற்று (Congenital Rubella Syndrome), தாளம்மை வைரஸ், குடலைத் தாக்கும் சில வைரஸ் போன்றவை காரணங்களாக இருக்கின்றன. மரபுரீதியாக முதல் வகை நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு, இந்தக் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டால் நோய் வெளிப்படுகிறது.