தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். வயோதிகம் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே சகுந்தலாவின் உயிர் பிரிந்துள்ளது. அவரது உடல் இன்று (செப்.18) அடக்கம் செய்யப்படும் என அவரது மகள் செல்வி தகவல் தெரிவித்தார்.