நம்மாழ்வார் நினைவு தினம்

85பார்த்தது
நம்மாழ்வார் நினைவு தினம்
திருத்துறைப்பூண்டி அருகே நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சாா்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 10-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ஆதிரெங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் அந்த மைய மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜிவ் மரக்கன்றுகளை வழங்கி பேசியது: தற்போது உலகெங்கும் வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் மனிதன் உட்பட வாழ்வதற்கு ஆதாரமான நிலம், நீா், காற்று போன்ற சுற்றுச்சூழலை பராமரிக்காமல் இருப்பதுதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையிலும், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளவும், இயற்கை பேரிடா்களை எதிா்கொள்ளவவும், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கும் வகையிலும் மரங்களை வளா்ப்பதன் மூலம் காற்றில் உள்ள மாசுக்களை நீக்க முடியும்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் நஞ்சில்லாத உணவுக்கு உத்திரவாதம் அளிக்கும் பாரம்பரிய இயற்கை வேளாண்மை மேற்கொள்வதுடன், அனைவரும் தங்களுடைய வாழ்நாளில் முடிந்த அளவுக்கு மரங்களை வளா்க்க முன்வருவதும் இயற்கை வேளாண்மைக்கென தன்னுடைய வாழ்நாளை அா்ப்பணித்து மறைந்த நம்மாழ்வாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி