நடமாடும் மருத்துவ மருந்தகம் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை

61பார்த்தது
நடமாடும் மருத்துவ மருந்தகம் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை
முத்துப்பேட்டை அருகே நடமாடும் கால்நடை மருத்துவ மருந்தக மருத்துவ ஊர்தி வழித்தட முகாம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஹமீது அலி, மன்னார்குடி கோட்ட உதவி இயக்குனர் ஆறுமுகம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடமாடும் கால்நடை மருந்தக மருத்துவ உறுதியின் வழித்தட தொடக்க முகாம் நடைபெற்றது.

கீழ நம்ம குறிச்சி, பெத்த வேலன் கோட்டகம், மேல நம்ம குறிச்சி வழித்தடங்களில் நடந்த முகாம்களை ஊராட்சி மன்ற தலைவர் முருகப்பா மேரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் மகேந்திரன் இடையூறு கால்நடை மருத்துவர் பிரேம், நடமாடும் கால்நடை மருத்துவர் தென்னவன் ஆகியோர் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த வசதியை ஏற்படுத்தித் தந்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கீழே நம்ம குறிச்சி மற்றும் மேல நம்ம குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி