எஸ் பி காவலர்களுக்கு அறிவுரை

84பார்த்தது
எஸ் பி காவலர்களுக்கு அறிவுரை
நீதிமன்ற அலுவல் புரியும் காவல் ஆளினர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், M. Sc, (Agri). , அவர்கள் தலைமையில், திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் நீதிமன்ற அலுவல் பணியில் ஈடுபடும் காவல் ஆளினர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் இன்று (08. 06. 2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, நீதிமன்ற கோப்பிற்க்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து நீதிமன்ற விசாரணைக்கு எடுக்கவும், நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக அரசு வழக்கறிஞரை சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறை படுத்த இருப்பது தொடர்பாகவும், நீதிமன்ற அலுவலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கி, நீதிமன்ற அலுவலில் உள்ள நிறை, குறைகளை கேட்டறிந்தார்கள்.

அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு. T. ஈஸ்வரன், மாவட்ட குற்ற பதிவேடுகள் கூட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. A. பிலிப்ஸ் பிராங்கிளின் கெனடி ஆகியோர் உடனிருந்தார்கள். M. Sc

தொடர்புடைய செய்தி