எழில் நகர் அருகே பேருந்தில் அடிப்பட்டு வாலிபர் உயிரிழப்பு

52பார்த்தது
திருவாரூர் பகுதியில் இருந்து மாப்பிள்ளை குப்பம் வழியாக நன்னிலம் பகுதிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் குடவாசல் தாலுக்கா விக்ரம் பாண்டியன் பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மகன் 20 வயதுடைய கோகுல்ராஜ். திருமணம் ஆகவில்லை. இவர் திருவாரூர் பகுதியில் இருந்து நன்னிலம் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்த நிலையில் நன்னிலம் எழில் நகர் பகுதியில் திருவாரூரில் இருந்து நன்னிலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை கோகுல்ராஜ் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி அரசு பேருந்து சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கோகுல்ராஜ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். நன்னிலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோகுல்ராஜ் உடலை உடற்குறு ஆய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி