திருவீழிமிழலை விழிநாதர் கோவில் சித்திரை திருவிழா

74பார்த்தது
திருவீழிமிழலை விழிநாதர் கோவில் சித்திரை திருவிழா
குடவாசல் அருகே திருவீழி மிழலை கிராமத்தில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வீழிநாதர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோவிலின் சித்திரை மாத திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் சித்திரை திருவிழாவின் தொடக்கமாக நேற்று மாலை திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசருக்கு படிக்காசு வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது 14ஆம் தேதி இரவு பூத வாகனத்தில் சுவாமி அம்பாள் திரு வீதி உலாவும் 18 ஆம் தேதி கார்த்தியாயினி அம்மனுக்கும் கல்யாண சுந்தரர்க்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி