தேசிய விளையாட்டு போட்டியில் ட்ரிப்பில் ஜம்ப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன்சித்திரவேல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
38வது தேசிய விளையாட்டு போட்டிகள் உத்தரகாண்ட் மாநிலம் டெரடோனில் நடைபெற்று வருகிறது. 18 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து பத்தாயிரம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர் தமிழ்நாட்டில் இருந்து 391 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். நீச்சல் துப்பாக்கி சுடுதல் மல்யுத்தம் ஹாக்கி குத்துச்சண்டை பளு தூக்குதல் என அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இதில் இடம் பெற்றுள்ளன இதன் ஒரு பகுதியாக ஆண்களுக்கான தடைகளை போட்டியில் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தமிழகத்தின் மன்னார்குடி அருகே சோனாபேட்டை கிராமத்தை சேர்ந்த பிரவீன் சித்திர வேல் என்ற இளைஞர் 16. 50 மீட்டர் தாண்டி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இரண்டாம் இடத்தை மற்றொரு தமிழக வீரரான சலாவூதீன், கேரள மாநில வீரர் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அர்ஜென்டினாவில் நடைபெற்ற ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் ஜூனியர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிகளை இந்தியாவிற்கு சேர்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது