போதையில் தகராறு.. தந்தையை எரித்துக் கொன்ற மகன் கைது

61பார்த்தது
போதையில் தகராறு.. தந்தையை எரித்துக் கொன்ற மகன் கைது
தென்காசி: கடையநல்லூர் போகநல்லூர் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணையை தொடங்கினர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவருக்கும் அவரது மகன் கௌரி என்பவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் சிவராஜ் காணாமல் போனது தெரியவந்தது. தொடர்ந்து கௌரியிடம் நத்திய விசாரணையில், போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையை எரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி