சலங்கை பூஜை விழா

85பார்த்தது
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சலங்கை பூஜை விழா ஸ்ரீ சங்கரா கலாலயா மாணவிகள் பாக்யஸ்ரீ, தனுஷ்ஸ்ரீ, ராகினி, அபர்ணா ஆகியோரின் பரதநாட்டியத்தோடு சலங்கை பூஜை நடைபெறுகிறது.

இந்த ஸ்ரீ சங்கரா கலாலயா நாட்டிய நடன பள்ளியை நடத்தி மாணவிகளுக்கு ஜதி மாறாமல் கற்றுக்கொடுக்கும் ஆசான் இஸ்லாமிய சகோதரர் பஹ்ருதீன்ஷேக் ஆவார் இவர் மஞ்சக்குடி சுவாமி தயானந்த பள்ளியில் பயின்று பரத நாட்டிய கலையில் பல பட்டங்கள் பெற்று இன்று 100 க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி அளித்து வருகிறார்
அவரிடம் பயிற்சி பெற்ற நான்கு மாணவிகள் இன்று நடைபெற்ற சலங்கை பூஜையில் புஷ்பாஞ்சலி அலாரிப்பு
கணபதி கௌதுவம் சப்தம் கீர்த்தனை ஸ்ரீ சக்ரராஜா நாச்சியார் திருமொழி தில்லானா கும்மி அழகான பழனிமலை மங்கலம் ஆகிய உறுப்பிடியில் பரதநாட்டியம் நடனமாடி ஆடல் வல்லான் நடராஜ பெருமானுக்கு சமர்ப்பணம் செய்து சலங்கை பூஜை நடைபெறுகிறது. இவ்விழாவில் குருமார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சலங்கை பூஜை செய்த மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து வாழ்த்தினர்.
இவ்விழாவில் நாட்டியம் கற்றுக் கொள்ளும் மாணவிகள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டுகளித்து வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி