அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக ஒருவரை தடுத்து வைத்தல், பெண்ணுக்கு எதிரான ஒழுக்கக்கேடான குற்றம், தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்டவையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.